மேலும் செய்திகள்
தொழில்நுட்ப கோளாறு 'மெட்ரோ' சேவை பாதிப்பு
15-Apr-2025
கொருக்குப்பேட்டை,ஆந்திர மாநிலம், நெல்லுார் மாவட்டம், சந்திரபாபு நகரைச் சேர்ந்தவர் அருள்குமார், 28. இவர், நண்பர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, சென்னை வந்திருந்தார்.இந்த நிலையில், நெல்லுார் செல்ல நேற்று முன்தினம் நள்ளிரவு, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஆலப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும், விரைவு ரயிலில் ஏறினார்.பொதுப்பெட்டியில் கூட்ட நெரிசல் காரணமாக, படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்தார். ரயில், பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்திற்கும், கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்திற்கும் இடையே, ஸ்டான்லி நகர் பிரிட்ஜ் அருகே வந்தது.அப்போது, துாக்க கலக்கத்தில் இருந்த அருள்குமார், ரயிலில் இருந்து கீழே விழுந்தார். இதில், வலது கை துண்டாகி ஆபத்தான நிலையில் இருந்த அருள்குமாரை, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
15-Apr-2025