கீதம் உணவகம் சார்பில் மார்கழி கோலப்போட்டி
சென்னை: பாரம்பரியத்தையும், சமூக ஒற்றுமையையும் போற்றும் வகையில், 'கீதம்' உணவகம் சார்பில், மார்கழி கோலப்போட்டி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 15ம் தேதி அண்ணா சாலை, தி.நகர், அண்ணா நகர், பல்லாவரம் உள்ளிட்ட சென்னையில் உள்ள கீதம் வெஜ் உணவகங்களில், அதிகாலை 4:00 மணி முதல் காலை 7:00 மணி வரை போட்டி நடந்தது. அரிசி மாவில், நுணுக்கமான கோலங்கள் போட்டு, பலர் போட்டிக்கு அழகு சேர்த்தனர். இந்த போட்டிக்கு, மக்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. இந்நிகழ்வில் பங்கேற்க, 3,000க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர். இதில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களுக்கும், கீதம் வெஜ் உணவகம் சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. வெற்றியாளர்களுக்கு, 25,000 ரூபாய் வரையிலான பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டன. இந்த கோலப்போட்டி, கீதம் உணவகங்களில் இம்மாதம் 31ம் தேதி வரை நடக்க உள்ளது.