உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெரினா நீச்சல் குளம் ஆன்லைனில் முன்பதிவு

மெரினா நீச்சல் குளம் ஆன்லைனில் முன்பதிவு

சென்னை, சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளம், 1.37 கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டது.சமீபத்தில், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நீச்சல் குளம், காலை 5:30 முதல் இரவு 7:30 மணி வரை செயல்படும். இதில், காலை 8:30 முதல் 9:30 மணி வரை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. நீச்சல் குளத்தில் குளிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு, 14 வயதுக்கு மேற்பட்டோருக்கு 50 ரூபாய்; 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டோருக்கு 30 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. நீச்சல் குளத்திற்கு வருவோர், முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்யும்படி மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:நீச்சல் குளத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. பொதுமக்கள், https://chennaicorporation.gov.in/gcc/ இணையதளத்தில் முன்பதிவு செய்வது, அவர்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும்.மேலும், ஆன்லைனில் பதிவு செய்வதன் வாயிலாக, 50 ரூபாய்க்கு பதிலாக, 45 ரூபாய்; 30 ரூபாய்க்கு பதிலாக, 25 ரூபாய் என, ஐந்து ரூபாய் சலுகை கட்டணமும் கிடைக்கும்.எனவே, மெரினா நீச்சல் குளத்திற்கு வருவோர், ஆன்லைனில் பதிவு செய்ய முன்வர வேண்டும். மெரினா நீச்சல் குளம், பராமரிப்பு பணிக்காக, திங்கள்தோறும் விடுமுறை விடப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி