உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருமண கோலத்தில் காதல்ஜோடி போலீஸ் கமிஷனரகத்தில் தஞ்சம்

திருமண கோலத்தில் காதல்ஜோடி போலீஸ் கமிஷனரகத்தில் தஞ்சம்

ஆதம்பாக்கம், பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி, திருமண கோலத்தில், சென்னை போலீஸ் கமிஷனரகத்தில் தஞ்சம் அடைந்தது. ஆதம்பாக்கம், கூட்ஸ்ஷெட் சாலையை சேர்ந்தவர் ரீகன், 34; கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர். ஆலந்துார், எம்.கே.என்., சாலை காவலர் குடியிருப்பில் வசிப்பவர் ஜெயந்திமேரி. வடபழனி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஸ்வேதா, 22. ரீகனும், ஸ்வேதாவும் சர்ச்சிற்கு செல்லும்போது பழக்கம் ஏற்பட்டு, இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் தான் காதலிப்பதை, வீட்டினரிடம் ஸ்வேதா தெரிவித்தார். வயது வித்தியாசம் காரணமக, காதலை ஏற்க பெற்றோர் மறுத்ததோடு, ஸ்வேதாவை திட்டியதாக கூறப்படுகிறது. ஜெயந்திமேரி காவல்துறையில் பணிபுரிவதால், காதலை பிரித்து விடுவார் என பயந்த ஸ்வேதா, இதுகுறித்து ரீகனிடம் பேசி, உடனே திருமணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி, நேற்று முன்தினம் மாலை எழும்பூர், புனித அந்தோணியார் சர்ச்சில் ரீகனும், ஸ்வேதாவும் திருமணம் செய்துக் கொண்டனர். பின், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தன். இதுகுறித்து, ஸ்வேதா அளித்த புகாரில், 'நாங்கள் இருவரும் காதல் திருமணம் செய்துக் கொண்டோம். இதில், பெற்றோருக்கு விரும்பம் இருக்காது என்பதால், எங்களை பிரிக்க முயற்சிப்பர். எங்களுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும்' எனக் கூறியிருந்தார். ஆதம்பாக்கம் காவல் நிலையத்திற்கு இருவரும் அழைத்து செல்லப்பட்டனர். பின், இரு தரப்பு பெற்றோரையும் காவல்நிலையம் வரவழைத்து பேசினர். பிள்ளைகளுக்கு தொல்லை கொடுக்க மாட்டோம் என, அவர்கள் எழுதிக் கொடுத்ததை அடுத்து, ரீகனுடன், ஸ்வேதாவை அனுப்பி வைத்தனர். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி