மேலும் செய்திகள்
பெண்ணை ஏமாற்றி பணம், நகை பறித்த வாலிபருக்கு வலை
10-Apr-2025
எண்ணுார், எர்ணாவூர், ஒத்தவாடை தெருவைச் சேர்ந்த குணசேகரன், 39; இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். மனைவி லலிதா, இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், 19 ம் தேதி அதிகாலை, வேலைக்கு செல்வதாக கூறி சென்ற குணசேகரன், மூன்று நாட்களாகியும் வீடு திரும்பவில்லை.மனைவி லலிதா அளித்த புகாரில், எண்ணுார் போலீசார் வழக்கு பதிந்து, குணசேகரனை தேடி வந்தனர்.நேற்று காலை, எர்ணாவூர் குட்டையில், அவரது உடல் மிதந்தது. போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இறைச்சி கடைக்கு வேலைக்கு அதிகாலை கிளம்பிச் சென்ற குணசேகரன், அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததாக கூறப்படுகிறது.ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது, கால் இடறி விழுந்து, குட்டையில் மூழ்கி உயிர் இழந்திருக்கலாம் என, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. **
10-Apr-2025