உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மேடவாக்கம் கோவில் குளம் பராமரிப்பின்றி சீரழியும் அவலம்

மேடவாக்கம் கோவில் குளம் பராமரிப்பின்றி சீரழியும் அவலம்

மேடவாக்கம், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது மேடவாக்கம். இங்கு, பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள குளம், 20 ஆண்டுகளுக்கு முன், பகுதிவாசிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதாக இருந்தது.இக்குளமாக 2 ஏக்கர் பரப்பளவில் இருந்தது. ஆக்கிரமிப்பினால், தற்போது ஒரு ஏக்கர் அளவில் சுருங்கி உள்ளது.குளம், புதர் மண்டியும், குப்பையாலும் நிரம்பி உள்ளது. இதனால், அருகில் உள்ள கெங்கையம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இதுகுறித்து பகுதிவாசிகள் கூறியதாவது:கெங்கையம்மன் கோவில் குளம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, விஜயநகரம், வெள்ளைக்கல் பகுதிவாசிகளின் குடிநீர் குளமாக இருந்தது.இதில், ஈமச்சடங்கு நிறைவேற்ற வருவோர், குளத்தில் சடங்கு பொருட்களை விட்டு செல்வதாலும், இரவில் மது அருந்துவோர் வீசி செல்லும் குப்பையாலும் குளம் மோசமான நிலையில் உள்ளது.எனவே, குளத்தை துார்வாரி ஆழப்படுத்தி, சுத்தம் செய்து, ஈமச்சடங்கு நிறைவேற்ற அங்கு நீர்த்தேக்க தொட்டி அமைத்தால், சடங்கை நிறைவேற்றுவோர் குளத்தில் இறங்கும் நிலை ஏற்படாது.இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் குளத்தை பயன்படுத்தலாம். தவிர, குளத்தை சுற்றி மின் விளக்குகள் அமைத்து, நடைபாதை அமைத்தால், சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்கலாம்.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இதை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை