உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோயம்பேடு சந்தையில் மருத்துவ முகாம்

கோயம்பேடு சந்தையில் மருத்துவ முகாம்

கோயம்பேடு:கோயம்பேடு சந்தையில் உள்ள கழிவுநீர் அகற்றல் மற்றும் கழிப்பறைகளின் பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாம் அங்காடி நிர்வாக குழு அலுவலக வளாகத்தில் நடந்தது.இதில், பாதுகாப்பு குறித்து அங்காடி நிர்வாக குழு முதன்மை நிர்வாக அதிகாரி இந்துமதி, துாய்மை பணியாளர்களுக்கு விளக்கினார்.அத்துடன், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என, எச்சரித்தார். மேலும், மருத்துவ முகாமில், நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், கண் புரை மற்றும் பெண்களுக்கான மருத்துவம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை