மருத்துவ முகாம் லட்சம் பேர் பயன்
சென்னை, சென்னையில் நடந்த மழைக்கால மருத்துவ முகாமில், 1.30 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை:பொதுமக்களுக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில், அக்., 15 முதல் நேற்று வரை, 2,433 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. அதில், 1.30 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இந்த முகாம்களில், ஒரு டாக்டர், ஒரு நர்ஸ், ஒரு பணியாளர் பணியாற்றி வருகின்றனர். சளி, காய்ச்சல், இருமல், தோல் நோய்கள், சேற்றுப்புண் உள்ளிட்ட மழைக்கால மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகின்றன.கொசு மருந்து தெளித்தல், கொசுப்புகை மருந்து அடித்தல் போன்ற பணிகளுக்காக, 3,368 களப்பணியாளர்கள் உள்ளனர். கொசுவை கட்டுப்படுத்தும் பணியில், 319 மருந்து தெளிப்பான்கள், 54 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி வாயிலாக இயங்கும், 156 ஸ்ப்ரேயர்கள், கையினால் இயக்கப்படும் 324 புகைப்பரப்பும் இயந்திரங்கள், வாகனங்களால் பொருத்தப்பட்ட, 64 புகைப்பரப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.