உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மன, மருத்துவ நல தின நிகழ்ச்சி

மன, மருத்துவ நல தின நிகழ்ச்சி

சென்னை, சென்னை போரூர் ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், உலக மனம், உடல் மருத்துவநல தினம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில், ஆரோக்யா மருத்துவ நிர்வாக இயக்குனர் சித்தா டாக்டர் சிவராமன் பேசியதாவது:தொற்று மற்றும் தொற்றா நோய்களால் ஏற்படும் தாக்கங்களை தளர்த்தவும், பாதிப்பை தள்ளிப்போடவும் யோகா, இசை, உணவு மற்றும் சமூக வாழ்க்கை முறைகள் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.ராமச்சந்திரா மருத்துவ கல்லுாரி தலைவர் பாலாஜி சிங் பேசுகையில், ''எம்.பி.பி.எஸ்., மாணவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் தேர்ந்தெடுத்து படிக்கும் பாடமாகவும், பயிற்சி காலத்தில் விரும்பும் கல்வியாகவும், மனம், உடல் மருத்துவம் முறை உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை