உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெத் ஆம்பெட்டமைன் வியாபாரி பெங்களூரில் கைது

மெத் ஆம்பெட்டமைன் வியாபாரி பெங்களூரில் கைது

மதுரவாயல், மதுரவாயல் மேம்பாலத்தின் கீழ் 'மெத் ஆம்பெட்டமைன்' போதை பொருள் விற்பனை செய்த, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சோமங்கர், 37, என்பவரை, இரு தினங்களுக்கு முன் மதுரவாயல் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 4 கிராம் மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.தொடர் விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டைச் சேர்ந்த அய்யப்பன், 26, என்பவரிடம் இருந்து போதை பொருள் வாங்கியதாக சோமங்கர் தெரிவித்தார். அவர் அளித்த தகவல்படி, அரக்கோணம் அருகே அய்யப்பனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர் விசாரணையில், பெங்களூரைச் சேர்ந்த சமீர், 37, என்பவரிடம் இருந்து, போதை பொருள் வாங்கியதாக தெரிவித்தார்.இதையடுத்து, பெங்களூரு விரைந்த தனிப்படை போலீசார், சமீர், 37, என்பவரை கைது செய்தனர். கேரளாவைச் சேர்ந்த சமீர், பெங்களூரில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார்.இதையடுத்து, அய்யப்பன் மற்றும் சமீரை நேற்று முன்தினம் கைது செய்த மதுரவாயல் போலீசார், அவர்களிடம் இருந்து 40 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். இவர்கள், 1 கிராம் மெத் ஆம்பெட்டமைனை, 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை