உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தரமணி - சோழிங்கநல்லுார் இடையே மெட்ரோ மேம்பால பணிகள் தீவிரம்

தரமணி - சோழிங்கநல்லுார் இடையே மெட்ரோ மேம்பால பணிகள் தீவிரம்

சென்னை,சென்னையில் மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்தில், மூன்று வழித்தடங்களில் நடக்கும் பணியில், ஒரு வழித்தடமாக மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை, 45 கி.மீ., துாரம் வரை பணி நடக்கிறது.மாதவரம் பால் பண்ணை, பசுமை வழிச்சாலை, சேத்துப்பட்டு, அடையாறு உள்ளிட்ட இடங்களில், சுரங்கப்பாதை பணிகள் நடந்து வருகின்றன.இதே போல், தரமணியில் இருந்து சிறுசேரி வரை, மேம்பால பாதை அமைக்கப்பட உள்ளது. இதில், சோழிங்கநல்லுார் வரையில் மேம்பாலம் பாதை அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:மாதவரம் - சிறுசேரி மெட்ரோ தடத்தில், தரமணி - சோழிங்கநல்லுார் வரையில், ஏற்கனவே அமைக்கப்பட்ட, 150க்கும் மேற்பட்ட துாண்களில் மேம்பாலம் அமைக்கும் பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.அடுத்த கட்டமாக, ரயில் பாதை அமைப்பது, சிக்னல் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த தடத்தில், அடுத்த ஆண்டு இறுதியில், ஒரு பகுதியாக மெட்ரோ ரயில் சேவை துவங்கப்படும்.சோழிங்கநல்லுார் -- சிறுசேரி இடையே நிலம் கையகப்படுத்துவது, நிறுவனம் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால், பணிகளும் தாமதமாக துவங்கப்பட்டன.தற்போது, இந்த பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. எனவே, அனைத்து மெட்ரோ ரயில் திட்டப்பணிகளும், 2027ல் முடிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி