மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
14-Aug-2025
திருவொற்றியூர்:திருவொற்றியூர் படவேட்டம்மன் கோவிலில், 508 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடந்தது. பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவொற்றியூர், காசி விஸ்வநாதர் கோவில் குப்பத்தில், பிரசித்தி பெற்ற படவேட்டம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், ஆடி மாதம் ஏழாவது வாரம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். விழாவின் முக்கிய திருவிழாவான கூழ் வார்த்தல் வைபவம், நேற்று மதியம் நடந்தது. முன்னதாக, காலை, திருவொற்றியூர், பொன்னியம்மன் கோவிலில் இருந்து, 508 பால்குட ஊர்வலம் துவங்கியது. மேலும், பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் அணிவகுத்தனர். படவேட்டம்மன் உற்சவ தாயார், ஒன்பது வகையான மலர் மாலைகள் சூடப்பட்டு, மகிஷாசூர மர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
14-Aug-2025