உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மணல் கடத்தி வந்த லாரியை சுரங்கத்துறையினர் பறிமுதல்

மணல் கடத்தி வந்த லாரியை சுரங்கத்துறையினர் பறிமுதல்

தி.நகர் :நள்ளிரவில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த லாரியை, சுரங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தி.நகர் வழியாக ஆற்று மணல் அனுமதி இன்றி கடத்தப்படுவதாக, புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவில், தி.நகரில் கண்காணிப்பில் ஈடுபட்டடனர். அப்போது, தி.நகர் திருமலை பிள்ளை சாலை வழியாக வந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அனுமதியின்றி மணல் ஏற்றி வரப்பட்டது தெரியவந்தது. அதற்குள் லாரி ஓட்டுநர் அங்கிருந்த தப்பினார்.இதையடுத்து, சுரங்கத் துறை அதிகாரிகள், லாரியை பறிமுதல் செய்து, பாண்டி பஜார் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாண்டி பஜார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை