உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில் பூமிக்கடியில் மின்கேபிள் நிதிக்கு காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

சென்னையில் பூமிக்கடியில் மின்கேபிள் நிதிக்கு காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

சென்னை:''சென்னையில், பூமிக்கடியில் மின் கேபிள் அமைக்கும் பணிகள், நிதி கிடைத்தவுடன் மேற்கொள்ளப்படும்,'' என, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., - பிரபாகர் ராஜா: எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் அனைத்து தெருக்களும் குறுகலாக உள்ளன. உயர்நிலை மின் கம்பங்கள் மக்களுக்கு ஆபத்தாக உள்ளன. அமைச்சர் விரைந்து, பூமிக்கடியில் மின் கேபிள்கள் அமைத்து தரவேண்டும். மழை நேரத்தில் மின்தடை ஏற்படுதை தடுத்து தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு பல பகுதிகளில் மின்பெட்டி உயர்த்தி தரப்பட்டு உள்ளது. விடுபட்ட பகுதிகளில் அந்த பணியை நிறைவு செய்யவேண்டும்.அமைச்சர் செந்தில்பாலாஜி: சென்னை மாநகராட்சியில் ஐந்து கோட்டடங்களில் உயர் தாழ்வழுத்த மின்கம்பிகள், பூமிக்கடியில் அமைக்கப்பட்டு உள்ளன. கே.கே.நகர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி ஆகிய கோட்டங்களில் பூமிக்கடியில் மின் கேபிள்கள் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, நிதி அனுமதி கோரப்பட்டுள்ளது. சென்னை முழுதும் விடுபட்ட பகுதிகளில் பூமிக்கடியில் மின்கேபிள்கள் அமைக்கும் பணிகள், நிதி கிடைத்தவுடன் மேற்கொள்ளப்படும். சென்னையில் சீரான மின் வினியோகத்திற்காக மின் பெட்டி ஒரு மீட்டர் உயர்த்தி அமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை