மேலும் செய்திகள்
கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
26-Dec-2024
மணலிபுதுநகர்:மணலிபுதுநகர், அற்புத குழந்தை இயேசு சர்ச் 45ம் ஆண்டு பெருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, சென்னை - மயிலை மறைமாவட்டம் அருட்பணி பீட்டர் தும்மா, தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கும்.ஒன்பது நாட்கள் நடைபெறும் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான, ஆண்டின் முதல் வியாழன் அற்புத குழந்தை இயேசுவின் சிறப்பு நாள் திருப்பலி, ஜன., 2 ல் நடக்கும்.திருத்தேர் பவனி திருவிழா, 4ம் தேதி மாலை நடக்கிறது. அதைத்தொடர்ந்து, அம்பத்துார் புனித சூசையப்பர் சர்ச் பங்கு தந்தை ஜேக்கப் தலைமையில், திருப்பலி நடத்தப்படுகிறது.நிறைவு நாளான, 5 ம் தேதி, அற்புத குழந்தை இயேசுவின் ஆசிர்வாத பெருவிழா நடக்கிறது. மாலை, 5:30 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவுறும்.திருவிழாவிற்கான ஏற்பாடுகளை, அற்புத குழந்தை இயேசு திருத்தல பங்கு தந்தை தங்ககுமார் தலைமையில் சபை மக்கள் செய்துள்ளனர்.
26-Dec-2024