மாயமான சிறுவன் சடலமாக மீட்பு
பூந்தமல்லி: --பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சந்தீப், 14; எட்டாம் வகுப்பு மாணவர். இவர், நேற்று முன்தினம் நண்பர்களுடன் வெளியே சென்றார்; பின் வீடு திரும்பவில்லை. இது குறித்து, பூந்தமல்லி காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இந்நிலையில், போரூர் ஏரியில் நேற்று சிறுவன் சந்தீப் உடல் மிதந்தது. போலீசாரின் விசாரணையில் நண்பர்களுடன் ஏரியில் குளிக்கச் சென்றபோது சந்தீப் நீரில் மூழ்கியது தெரியவந்தது. அவரை காப்பாற்ற முயன்றும் முடியாததால், நண்பர்கள் பயந்துபோய் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. குளிக்கும்போது நீரில் மூழ்கி உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.