கட்டட தொழிலாளியிடம் மொபைல் போன் பறிப்பு
பெருங்களத்துார், வந்தவாசி, ஆரியகுப்பம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன், 38. பெருங்களத்துாரை அடுத்த வெங்கம்பாக்கத்தில் தங்கி, கட்டட வேலை செய்து வந்தார்.நேற்று முன்தினம் மாலை, பணி முடிந்து மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பின்னால் அடையாளம் தெரியாத வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அன்பழகனின் மொபைல் போனை பறித்து சென்றனர். பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.