உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மொபைல் போன் திருடன் கைது

மொபைல் போன் திருடன் கைது

சென்னை, நள்ளிரவில் வீடு புகுந்து நான்கு மொபைல் போன்களை திருடிச் சென்றவரை, போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டை, கருணாநிதி நகர் 4வது தெருவைச் சேர்ந்தவர் முருகன், 47; மெக்கானிக். இவர், நேற்று முன்தினம் இரவு காற்று வசதிக்காக கதவை திறந்துவைத்து, குடும்பத்துடன் உறங்கி உள்ளார். காலை எழுந்துபார்த்தபோது, வீட்டில் இருந்த நான்கு மொபைல் போன்களும் திருட்டுபோனது தெரியவந்தது. இது குறித்து ஆர்.கே.நகர் போலீசார் விசாரித்தனர். இதில், தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சங்கர், 22 என்பவர், திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து, ஐ - போன் உட்பட, நான்கு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி