மொபைல் போன் திருடியவர் சிக்கினார்
சென்னை: புழல், கதிர்வேடு பகுதியில் மொபைல் போன் கடை நடத்தி வருபவர் ஆரோன், 26. இவர், 24ம் தேதி கடை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இரண்டு மொபைல் போன்கள், சார்ஜர்கள் திருடுபோயின. இது குறித்து விசாரித்த புழல் போலீசார், திருட்டில் ஈடுபட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தப்பேஸ்வர் ஓரான், 29, என்பவரை கைது செய்து, திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.