119 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.21 கோடியில் நவீன பைக்
சென்னை, தென்சென்னை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், கிண்டி, லேபர் காலனி உயர்நிலை பள்ளியில், நேற்று, 1.21 கோடி ரூபாய் மதிப்பில், 119 பேருக்கு, இணைப்பு சக்கரம் பொருத்திய பைக் வழங்கப்பட்டது.மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், பயனாளிகளுக்கு பைக் வழங்கிய பின் கூறியதாவது:தென்சென்னை மாவட்டத்தில், 2024 - 25 நிதியாண்டில், 6,656 மாற்றுத்திறனாளிகளுக்கு, 15.67 கோடி ரூபாய் உதவி தொகையாக வழங்கப்பட்டுள்ளது.ஆவின் பாலகம் நடத்த, 50,000 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. கல்வி உதவி தொகையாக, 90.76 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார் ஜகடே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.