மேலும் செய்திகள்
மண்டல ஹாக்கி போட்டி எம்.ஓ.பி., வைஷ்ணவ் சாம்பியன்
11-Sep-2024
சென்னை, -சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளை 'ஏ' மற்றும் 'பி' என, இரு பிரிவுகளாக பிரித்து, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.இதில், 'ஏ' மண்டல மகளிர் கல்லுாரிகளுக்கான ஹேண்ட்பால் போட்டி, செங்கல்பட்டு, அக் ஷயா கலை கல்லுாரி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. போட்டியில், மண்டலத்திற்கு உட்பட 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் பங்கேற்றன.காலிறுதி ஆட்டத்தில், எம்.ஓ.பி.வைஷ்ணவ் அணி, 13 - 2 என்ற கணக்கில் பி.டபிள்யூ.சி., அணியையும், அரையிறுதியில், எம்.ஓ.பி., வைஷ்ணவ் அணி, 16 - 3 என்ற கணக்கில் எஸ்.டி.என்.பி., கல்லுாரியையும் தோற்கடித்தன.இறுதி போட்டியில் எம்.ஓ.பி.வைஷ்ணவ் மற்றும் எம்.ஜி.ஆர்., ஜானகி அம்மாள் கல்லுாரி அணிகள் மோதின.அதில், 13 - 8 என்ற கணக்கில் எம்.ஓ.பி., வைஷ்ணவ் அணி வெற்றி பெற்று, முதலிடத்தை பிடித்தது. மாநில கல்லுாரி மற்றும் எஸ்.டி.என்.பி., கல்லுாரிகள், முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களை பிடித்தன.
11-Sep-2024