உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 13 சவரன் நகை திருடிய தாய் மகள் கைது

13 சவரன் நகை திருடிய தாய் மகள் கைது

அம்பத்துார்: அம்பத்துார், ஞானமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் பியூலா, 45. இவர், தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார். அதே வீட்டின் கீழ்தளத்தில் ரேவதி, 38, என்பவர், கணவர் மற்றும் 15 வயது மகளுடன் வசித்து வருகிறார். பியூலாவின் தாயுடன், ரேவதி நட்பு ரீதியாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில், அவரது கவனத்தை திசை திருப்பிய ரேவதி, தன் மகளை பியூலாவின் வீட்டிற்குள் அனுப்பி, பீரோவில் இருந்த 13 சவரன் நகையை திருடியுள்ளார். இதையறிந்த பியூலா, கடந்த 16ம் தேதி, அம்பத்துார் போலீசில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், ரேவதி மற்றும் அவரது மகளை கைது செய்து, நகையை மீட்டனர். சிறுமியை சிறார் சீர்திருத்தப்பள்ளியிலும், ரேவதியை புழல் சிறையிலும் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை