தெற்கு ரயில்வேயில் தாய்மொழி தினம்
சென்னை,தெற்கு ரயில்வே சென்னை கோட்ட கூடுதல் மேலாளர் அங்கூர் சவுகானின் அறிவுறுத்தலின்படி, தலைமை அலுவலகத்தில், நேற்று தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டது. ரயில்வேயின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் போன்ற இடங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, வினாடி - வினா போட்டியை, சென்னை கோட்ட பிரிவின் மூத்த மொழி அதிகாரி ஸ்ரீசீனிவாசன் நடத்தினார்.நிறைவாக, தலா மூன்று பேர் என, ஐந்து அணிகள் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. பரிசை கோட்ட மேலாளர் விரைவில் வழங்குவார். வினாடி - வினா நிகழ்ச்சிக்கான கேள்விகளில், பல கேள்விகள் 'தினமலர்' குறுக்கெழுத்து போட்டியில் இருந்து எடுத்தாக, ஸ்ரீசீனிவாசன் தெரிவித்தார்.