பஸ் இயக்கும் முன் விபர பதிவு முக்கியம் எம்.டி.சி., உத்தரவு
சென்னை:சென்னை மாநகர போக்குவரத்து கழகம், கண்காணிப்பாளர்கள் மற்றும் கிளை மேலாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாநகர போக்குரவத்து கழகத்தில், இ.டி.எம்., எனப்படும் மின்னணு பயணச்சீட்டு வழங்கும் கருவி வாயிலாக, பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த கருவியில், விபரங்களை தவறாக பதிவு செய்வதால், பயணியர் பயன்படுத்தும், 'சென்னை பஸ் செயலி'யில், பேருந்துகள் வரும் நேரம் சரிவர தெரியாமல், தேவையற்ற குழப்பம் ஏற்படுகிறது.எனவே, வழித்தட எண், பேருந்து பக்கவாட்டு எண், ஓட்டுநர், நடத்துனர் பணி எண் உள்ளிட்ட விபரங்களை சரியாக பதிவு செய்த பிறகே, இ.டி.எம்., கருவியில், 'வே பில்' பதிவேற்ற வேண்டும். எதேனும் மாற்றம் ஏற்பட்டால் நடத்துநர், கணினி பிரிவுக்கு சென்று, விபரங்களை சரி செய்த பிறகே, வழித்தடத்தில் பேருந்தை இயக்க வேண்டும். ஆய்வின்போது, தவறாக பதிவு தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட நபர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.