உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மைலெடி பூங்காவில் இன்று மாநாகராட்சி நீச்சல் போட்டி

மைலெடி பூங்காவில் இன்று மாநாகராட்சி நீச்சல் போட்டி

சென்னை, மார்ச் 21-சென்னை மாநகராட்சி ஆண்டு விளையாட்டு போட்டிகள், நகரில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகின்றன.போட்டிகளில், பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் கவுன்சிலர்கள் என, 2,416 பேர் பங்கேற்றுள்ளனர்.அந்தவகையில், பணியாளர்களுக்கான நீச்சல் போட்டி, இன்று, பெரியமேடில் உள்ள மைலெடி நீச்சல் குளத்தில் நடக்கிறது. இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்த உள்ளனர். நாளை மறுநாள் போட்டிகள் கிடையாது. இறுதி நாளான 24, 25ம் தேதிகளில், 50 அணிகள் பங்கேற்கும், கிரிக்கெட் போட்டிகளுடன் மாநகராட்சி பணியாளர்களுக்கு போட்டி நிறைவடைகிறது என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை