உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட கொலை குற்றவாளி கைது

வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட கொலை குற்றவாளி கைது

சென்னை: ஜாம்பஜாரில், வாரன்ட் பிறப்பிக்கப்பட்ட தலைமறைவு கொலை குற்றவாளியை, போலீசார் நேற்று கைது செய்தனர். ஜாம்பஜார் பகுதியி ல், கடந்த 2022ம் ஆண்டு ஆக., 16ம் தேதி, ராஜா, 46, என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய, மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த பிரகாஷ், 24, என்பவரை, ஜாம்பஜார் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ஜாமினில் வெளியே வந்த பிரகாஷ், தலைமறைவானார். தொடர்ந்து, நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாததால், 13ம் தேதி பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த பிரகாஷை, நேற்று போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை