கொலை குற்றவாளி கஞ்சா வழக்கில் கைது
அண்ணா நகர் அண்ணா நகர், கிரசன்ட் மைதானத்தில், ரவுடிகள் இருவர் பதுங்கி இருப்பதாக, ரவுடிகள் ஒழிப்பு பிரிவு போலீசார் மற்றும் அண்ணா நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று முன்தினம் இரவு, மைதானத்தை கண்காணித்து, இருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில், அம்பத்துாரை சேர்ந்த நெப்போலியன், 30, அயனாவரத்தை சேர்ந்த சதீஷ்குமார், 25, என்பது தெரிந்தது.விசாரணையில், நெப்போலியன், சமீபத்தில் நடந்த அண்ணா நகர் ரவுடி ராபர்ட் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளி என்பதும், இருவரும் ரவுடிகள் பட்டியலில் இருப்போர் என்பதும் தெரிந்தது.அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த, 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.