வாலிபர் மர்ம மரணம்
சென்னை, பெரியமேடு போலீசார், நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில், பூங்கா ரயில் நிலையம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மின் துாக்கி அருகே எந்தவித அசைவுமின்றி வாலிபர் ஒருவர் இருப்பதை பார்த்து, '108' ஆம்புலன்ஸ் வரவழைத்து பரிசோதித்தனர்.இதில், அந்த வாலிபர் உயிரிழந்தது தெரியவந்தது. விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணி, 27, என்பதும், கந்தன் சாவடியில் உள்ள, 'ஒமேகா ஹெல்த் கேர்' நிறுவனத்தில் பணி புரிந்ததும் தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.