மேலும் செய்திகள்
பால், பானம் தயாரிப்பில் நந்தினிக்கு 4வது இடம்
30-Jun-2025
சென்னை, ஆவினுக்கு போட்டியாக சென்னையில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் பாலகங்களை திறக்க, கர்நாடகாவின் 'நந்தினி' திட்டமிட்டுள்ளது. பாரிமுனையில் புதிய பாலகம் திறக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு மாநிலங்களுக்கும், தனித்தனியாக பால் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றின் வாயிலாக உற்பத்தியாகும் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்கள், பல்வேறு மாநிலங்களில் விற்கப்படுகின்றன.ஆனால், பால் மற்றும் தயிர் உள்ளிட்ட பொருட்களை விற்க, பல மாநில அரசுகள் அனுமதிப்பது இல்லை.கடந்தாண்டு, குஜராத்தின் பால் கூட்டுறவு நிறுவனமான அமுல், தமிழகத்தில் பால் விற்பனையை துவங்க திட்டமிடப்பட்டது. இதற்காக கிருஷ்ணகிரியில், பால் பாக்கெட் தயாரிப்பு தொழிற்சாலையும், திருவள்ளூர் மாவட்டம் அலமாதியில், தயிர், பனீர் உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தி கிடங்கும் அமைத்தது.இதனால், நஷ்டத்தில் இயங்கும் தமிழக பால் கூட்டுறவு நிறுவனமான ஆவின், பெரும் நெருக்கடிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது.இதையடுத்து, அமுல் பால் விற்பனையை தடுத்து நிறுத்த, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியது. இதனால், பால் மற்றும் தயிர் விற்பனை திட்டத்தை அமுல் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் ஆவினுக்கு போட்டியாக, கர்நாடகாவின் பால் கூட்டுறவு நிறுவனமான நந்தினி, பால் பொருட்கள் விற்பனை செய்து வருகிறது. புதிதாக பூக்கடை போலீஸ் நிலையம், பிராட்வே பஸ் நிலையத்திற்கு இடையே நந்தினி பாலகம் திறக்கப்பட்டு உள்ளது. இங்கு பால், தயிர் விற்பனையும் நடந்து வருகிறது.மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள 10க்கும் மேற்பட்ட இடங்களில், பாலகங்களை திறக்கவும், நந்தினி நிறுவனத்திற்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியதாக தெரிகிறது. நஷ்டத்தில் இயங்கும் ஆவினை வளர்ப்பதில் ஆர்வம் காட்டாமல், கர்நாடகா நந்தினி நிறுவனத்திற்கு தமிழக அரசு ஆதரவு கரம் நீட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
30-Jun-2025