உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில் தேசிய மல்லர் கம்பம் துவக்கம்

சென்னையில் தேசிய மல்லர் கம்பம் துவக்கம்

சென்னை: தேசிய பல்கலைகளுக்கு இடையிலான மல்லர் கம்பம் சாம்பியன் ஷிப் போட்டி, பூந்தமல்லியில் உள்ள விநாயகா மிஷன் பல்கலையில் நேற்று துவங்கியது. இந்திய பல்கலை சங்கம் ஆதரவுடன், விநாயகா மிஷன் பல்கலையின் விளையாட்டு மற்றும் உடற்கல்வித் துறை சார்பில், தேசிய அளவிலான பல்கலை மல்லர் கம்பம் சாம்பியன்ஷிப் 2025 - 26 போட்டி, பல்கலை வளாகத்தில் நேற்று துவங்கியது. நாட்டின் 70 பல்கலைகளைச் 700க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். விழாவை, பல்கலை வேந்தர் டாக்டர் கணேசன் துவக்கி வைத்து, ''மல்லர் கம்பம் என்பது, இளைஞர்களின் உடல் மற்றும் மன உறுதியை மேம்படுத்தும் பாரம்பரிய விளையாட்டு,'' என பேசினார். இந்நிகழ்ச்சியில், துணைத் தலைவர் டாக்டர் அனுராதா கணேசன், மாணவர் நல இயக்குநர் டாக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ