உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேசிய ஆணழகன் சாம்பியன்ஷிப் கட்டுடலை காட்டி அசத்திய வீரர்கள்

தேசிய ஆணழகன் சாம்பியன்ஷிப் கட்டுடலை காட்டி அசத்திய வீரர்கள்

சென்னை :என்.பி.சி., ஆதரவுடன், தமிழ்நாடு பிசிக்ஸ் அலைன்ஸ் மற்றும் கிரசண்ட் பல்கலை இணைந்து, தேசிய அளவிலான ஆணழகன் போட்டியை, வண்டலுாரில் உள்ள பல்கலை வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை நடத்தின.போட்டியில், தமிழகம், டில்லி, மேற்கு வங்கம் உட்பட நாடு முழுதும் இருந்து, 150க்கும் மேற்பட்ட வீரர்கள் கட்டுடலை காட்டி அசத்தினர்.ஆண்களுக்கான, 'கிளாசிக் சாம்பியன் ஆப் சாம்பியன்' பட்டத்தை, மேற்கு வங்க வீரர் பிஸ்வஜித் பாசக், 'மென் பிசிக்' சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டத்தை, டில்லி வீரர் ரஜத் கோயன் ஆகியோர் வென்றனர்.ஜூனியர் பாடி பில்டிங் ஹெவி வெயிட் பிரிவில், தமிழக வீரர் என்.எஸ்.ரஞ்சித், பாடி பில்டிங் வெல்டர் வெயிட் பிரிவில், தமிழகத்தின் இ.ஜான் ஆகியோர் பட்டம் வென்றனர். மிடில் வெயிட் பிரிவில், தமிழகத்தின் சுரேஷ் பாபு, ஜூனியர் மென் பிசிக் 'ஏ' பிரிவில், தமிழகத்தின் சையத் வாசிம் பட்டம் வென்றனர்.ஜூனியர் 'பி' பிரிவில், தமிழகத்தின் திஷாந்த், ஓபன் கிளாசிக் 'சி' பிரிவில், தமிழகத்தின் தாஸ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, கிரசண்ட் பல்கலை துணை வேந்தர் முருகேசன், உடற்கல்வியியல் இயக்குனர் செல்வகுமார், என்.சி.பி., தென்னிந்திய மண்டல தலைவர் பொன்னம்பலவானன் பரிசுகளை வழங்கினர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை