உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தேசிய ரயில்வே பவர்லிப்டிங் ஐ.சி.எப்., வீரருக்கு தங்கம்

 தேசிய ரயில்வே பவர்லிப்டிங் ஐ.சி.எப்., வீரருக்கு தங்கம்

சென்னை: உத்தரகண்டில் நடந்த ரயில்வே அணிகளுக்கு இடையில் நடந்த 'பவர்லிப்டிங்' எனும் வலுதுாக்கும் போட்டியில், சென்னையைச் சேர்ந்த ஐ.சி.எப்., வீரர் முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றார். ரயில்வே அணிகளுக்கு இடையிலான தேசிய பவர்லிப்டிங் போட்டி, உத்தரகண்ட் மாநிலத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தெற்கு, மேற்கு, வடக்கு, தென்மேற்கு, ஐ.சி.எப்., உள்ளிட்ட பல்வேறு ரயில்வே அணிகளை சேர்ந்த வீரர்கள், பல்வேறு எடை பிரிவில் பங்கேற்றனர். இந்த போட்டியில், அயனாவரத்தைச் சேர்ந்த எஸ்.நவீன், 24, என்ற வீரர் ஐ.சி.எப்., அணி சார்பில், 105 கிலோ எடை பிரிவில் பங்கேற் றார். இவர், ஸ்குவாட் - 392.5 கிலோ; பெஞ்ச் பிரஸ் - 247.5 கிலோ; டெட் லிப்ட் - 315 கிலோ என, மொத்தம் 955 கிலோ எடைகளை துாக்கி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மேலும், ந டந்து முடிந்த அனைத்து சுற்றுகளிலும், ஐ.சி.எப்., அணி 57 புள்ளிகள் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ