உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேசிய துடுப்பு போட்டி ராமநாதபுரத்தில் துவக்கம்

தேசிய துடுப்பு போட்டி ராமநாதபுரத்தில் துவக்கம்

சென்னை, தேசிய அளவிலான துடுப்பு போட்டி, ராமநாதபுரத்தில் நேற்று துவங்கியது. இதில், 150க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். இந்திய சர்பிங் சங்கம் மற்றும் தமிழக சுற்றுலா துறை சார்பில், தேசிய அளவிலான 'ஸ்டாண்ட் அப் பாடில் சாம்பியன்ஷிப்' எனப்படும் நீர் விளையாட்டில் ஒன்றான துடுப்பு போட்டி, ராமநாதபுரத்தின் அரியமான் கடற்கரையில் நேற்று துவங்கியது. இதில், தமிழகம், கேரளா, கோவா உட்பட 10 மாநில அணிகளை சேர்ந்த, 150க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர், ஜூனியர், சீனியர் மற்றும் மாஸ்டர் என, மூன்று பிரிவுகளாக போட்டியிடுகின்றனர். சப் ஸ்பிரின்ட் - 200 மீட்டர், சப் டிஸ்டன்ஸ் - 10 கி.மீட்டர், சப் டெக்னிக்கல் மற்றும் நீச்சல் தெரிந்தோர் பங்கேற்கும் கேளிக்கை பிரிவு என, நான்கு சுற்றுகளாக நடக்கும் இப்போட்டியில், சென்னையை சேர்ந்த சேகர் பிச்சை, சபரி, விஜயலட்சுமி இருளப்பன் உட்பட, 20 தமிழக முன்னணி வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். கடந்த மாதம் முடிந்த 'கோவலங்க்' தேசிய துடுப்பு போட்டியில், தமிழக அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த போட்டியிலும், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை