உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேசிய ஸ்னுாக்கர் போட்டி அண்ணாநகரில் துவக்கம்

தேசிய ஸ்னுாக்கர் போட்டி அண்ணாநகரில் துவக்கம்

சென்னை:அண்ணா நகரில் இயங்கிவரும் 'டவர்ஸ் கிளப்' அமைப்பின் சார்பில், கடந்தாண்டு, அகில இந்திய ஓபன் ஸ்னுாக்கர் போட்டி, முதன் முதலாக நடத்தப்பட்டது.இரண்டாவது முறையாக, அகில இந்திய ஸ்னுாக்கர் போட்டி, அண்ணா நகர் டவர் கிளப்பில் இன்று துவங்கி, 20ம் தேதி முடிவடைகிறது.இரு பாலருக்குமான இப்போட்டியில், நாட்டின் முன்னணி வீரர்கள் உட்பட 128 வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர். மொத்த பரிசுத் தொகையாக 7.70 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.ஆண்களில் ஆதித்ய மேத்தா, லட்சுமண் ராவத், முகமது ஹுசேன் கான், பராஸ் குப்தா, சுந்தீப் குலாதி, கமல் சாவ்லா உட்பட பல முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர்.பெண்களில் இந்தியாவின் 'நம்பர் - ஒன்' வீராங்கனை அனுபமா, தமிழகத்தைச் சேர்ந்த இரண்டாம் நிலை வீராங்கனை அமீகமானி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை