மேலும் செய்திகள்
இளைஞர்களை விவசாயிகளாக்க களம் இறங்கிய அமைப்பு
13-Aug-2025
சென்னை, இந்திய கைவினை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில், இயற்கை வண்ண கைத்தறி விற்பனை கண்காட்சி, ஆழ்வார்பேட்டை சி.பி.ஆர்ட்ஸ் மையத்தில் நேற்று துவங்கியது. தமிழகத்தின் இயற்கை விவசாயம் மற்றும் பொருட்களை ஊக்குவித்து வளர்த்து வரும், 'துலா, டெம்பிள் விபாஸ், குவாலம் பத்திக், போர்க்கை' ஆகிய அமைப்புள் இணைந்து, இயற்கை சாய கைத்தறி, கைவினைத் திருவிழாவை, ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி.ஆர்ட்., மையத்தில் நடத்துகின்றன. மூன்று நாள் திருவிழாவை, நடிகை ரேவதி துவக்கி வைத்தார். கண்காட்சி குறித்து, அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மஹிமா கூறியதாவது: கொரோனா கால கட்டத்தில், கைத்தறி நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால், கொரோனாவுக்கு பின், நாடு முழுதும் உள்ள கைத்தறி நெசவாளர்களை ஒருங்கிணைத்து, இக்கண்காட்சியை நடத்தி வருகிறோம். ஆடைகளில் ரசாயனம் பயன்படுத்துவதால், ஏற்படும் மாசுபாட்டை தவிர்த்து சுற்றுச் சூழலுக்கு உகந்த, இயற்கை சாயங்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பது கண்காட்சியின் நோக்கம். அந்தவகையில், சென்னையில் நான்காவது முறையாக இந்த கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியில், நாட்டு பருத்தி, ஆர்கானிக் பருத்தி, இயற்கை சாயம் பூசப்பட்ட ஆடைகள், ஆந்திர மாநிலத்தின் பொந்துாரு காட்டன், மேற்கு வங்கத்தின் மஸ்லின் பருத்தி ஆடைகள், தமிழகத்தில் தர்மபுரி மாவட்ட பழங்குடிகள் தயாரிக்கும் லம்பாடி ரகங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன. அதேபோல், மரம் மற்றும் தேங்காய் சிரட்டையால் செய்யப்பட்ட அழகு சாதனப் பொருட்கள், ஆபரணங்கள், இசை கருவிகள், வீட்டு உபபேயாக பொருட்கள், தேன் உள்ளிட்ட சிறு தானிய இயற்கை உணவுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத், பெங்களூரு, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநில கைவினைக் கலைஞர்கள், கைத்தறி நெசவாளர்கள் கண்காட்சியில் முகாமிட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார். மூன்று நாள் கண்காட்சி நாளை நிறைடைய உள்ளது. காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். அனுமதி இலவசம். புதிய அனுபவம் கிடைக்கும் கண்காட்சியில் சேலை தயாரிப்பு சார்ந்த பத்திக் தொழில்நுட்ப பயிற்சி, கைகளால் நுாற்றல் மற்றும் நெசவு உள்ளிட்ட பல்வேறு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஹீலிங் தெரபி, பாரம்பரிய விளையாட்டுகள் மட்டுமின்றி, உங்கள் நகைகளை நீங்களே உருவாக்குங்கள் எனும் ஒரு சிறப்பு பிரிவும் உள்ளது. மொத்தத்தில் இந்த கண்காட்சிக்கு வருவோர் புதிய அனுபவங்களையும், வாழ்க்கை முறையையும் கற்று செல்லலாம். - அனந்து, இயற்கை விவசாயி.
13-Aug-2025