உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நேர்மை நகர் மயான பூமி 15 நாட்கள் மூடல்

நேர்மை நகர் மயான பூமி 15 நாட்கள் மூடல்

சென்னை: திரு.வி.க.நகர் நேர்மை நகர் மயானபூமி பராமரிப்பு பணிகள் காரணமாக, 15 நாட்கள் மூடப்படுகிறது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: திரு.வி.க.நகர் மண்டலம், 66வது வார்டுக்கு உட்பட்ட நேர்மை நகர் மயானபூமியில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இன்று முதல் வரும் 25ம் தேதி வரை, 15 நாட்கள் மயான பூமி இயங்காது. பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில், பொதுமக்கள் அருகில் உள்ள தாங்கல், ஜி.கே.எம்., மயான பூமிகளை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ