சீரமைக்கப்படாத சாலை அதிகாரிகள் அலட்சியம்
சென்னை, ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில், கலவை தெரு உள்ளது. இத்தெருவில் குடிநீர் வாரியத்தினர் சாலையை தோண்டி, குழாய் பதிக்கும் பணி மேற்கொண்டனர்.பணிகள் முடிந்து மூன்று வாரத்திற்கு மேலாகியும், இதுவரை சாலை மறு சீரமைப்பதற்கான நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொள்ளவில்லை.இதனால் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் தவறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும், புழுதி பறப்பதால், பகல் நேரத்தில் கூட அப்பகுதிவாசிகள் வீட்டு ஜன்னல்களை திறக்காமல், மூடியே வைத்துள்ளனர். சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.