| ADDED : மே 01, 2025 11:56 PM
நெமிலிச்சேரி,மே தினத்தை முன்னிட்டு, நெமிலிச்சேரி ஊராட்சியில் நேற்று, சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. பூந்தமல்லி ஊராட்சி பற்றாளர் சரளா தலைமை வகித்தார்.இக்கூட்டம் குறித்து முறையாக அறிவிக்காததால், அதில் பங்கேற்க பகுதிவாசிகள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.வழக்கமாக 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் கூட்டத்தில், நேற்று 30 பேர் மட்டுமே இருந்தனர்.கூட்டத்தில், சதுர அடி 2,500 முதல் 3,000 வரை கட்டப்படும் வீடுகளுக்கு, சுய சான்று அடிப்படையில் கட்டட அனுமதி வழங்க வேண்டும்.சொத்து வரி, குடிநீர் வரி உள்ளிட்ட அனைத்து வரியையும் இணையதளம் வாயிலாக வசூலிக்க வேண்டும்.கிராம ஊராட்சியில் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகிப்பது, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது, 'ஜல்ஜீவன்' திட்டம் வாயிலாக குடிநீர் விநியோகிப்பது உட்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.வழக்கமான விவாதங்கள் எதுவுமின்றி, சிறிது நேரத்திலே கூட்டம் முடிந்தது.