மேலும் செய்திகள்
பராமரிப்பின்றி பொது கழிப்பறை
10-Nov-2024
அண்ணா நகர், நியூ ஆவடி சாலையில் இயங்கும், சென்னை மாநகராட்சியின் வேலங்காடு மின் மயானத்தில், கழிப்பறையில் இருந்த இரும்பு கதவை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.அண்ணா நகர் மண்டலம், 102வது வார்டு, நியூ ஆவடி சாலையில், சென்னை மாநகராட்சி பராமரிப்பில், வேலங்காடு மின் மயானம் செயல்படுகிறது. இங்கு, மின் எரிமேடை, அலுவலக அறைகள், மின்வாரிய அறை மற்றும் ஊழியர்களுக்கான கழிப்பறைகள் உள்ளன. இரு தினங்களுக்கு முன், ஊழியர்கள் வழக்கம் போல் காலை மயானத்தை திறந்தனர். அப்போது, வளாகத்தில் உள்ள பொதுக் கழிப்பறையின் நுழைவாயிலில் பொறுத்தப்பட்டிருந்த இரும்பு கதவை, சுவரை உடைத்து திருடப்பட்டிருந்தது.இதுகுறித்து, வார்டு உதவிப்பொறியாளர் சங்கர், அண்ணா நகர் போலீசில் புகார் அளித்தார். கழிப்பறை அருகில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், மர்மநபர்களை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.இரவு நேரங்களில் மயானத்தின் பின்பக்க சுவர் வழியாக மர்மநபர்கள் வந்து, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Nov-2024