உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.9 கோடியில் புதிய கட்டடங்கள் திறப்பு

ரூ.9 கோடியில் புதிய கட்டடங்கள் திறப்பு

ஆலந்துார், ஆலந்துார் மண்டலத்தில், சிங்கார சென்னை - 2.0 திட்டத்தில், வாணுவம்பேட்டையில், 5.70 கோடி ரூபாயில், வாணுவம்பேட்டை, நங்கநல்லுார், முகலிவாக்கம் ஆகிய மூன்று இடங்களில் பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டன. மேலும், 3.30 கோடி ரூபாயில், நந்தம்பாக்கம், முகலிவாக்கம், பழவந்தாங்கல், மணப்பாக்கம் ஆகிய பகுதிகளில், பூங்கா மற்றும் பல்நோக்கு மைய கட்டடங்கள் கட்டப்பட்டன.இதை, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், மண்டலக்குழு தலைவர் சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி