உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருத்தணி கோவில் விடுதிகளில் குற்றச்செயல் தடுக்க புது கட்டுப்பாடு

திருத்தணி கோவில் விடுதிகளில் குற்றச்செயல் தடுக்க புது கட்டுப்பாடு

திருத்தணி, திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் திரளான பக்தர்கள் வந்து செல்வர்.வெளியூர் பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில், மூன்று இடங்களில், தேவஸ்தான விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், தணிகை மற்றும் கார்த்திகேயன் ஆகிய இடங்களில், குளிர்சாதன குடில் மற்றும் சாதாரண அறைகளும், சரவண பொய்கையில், 24 சாதாரண அறைகள் என, 150க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.சமீபகாலமாக பக்தர்கள் என்ற பெயரில், சில தனி நபர்கள் அறையை வாடகைக்கு எடுத்து, மது விருந்து, சீட்டாட்டம் மற்றும் தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால், குற்றச்சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறின. இதை தடுக்க, கோவில் நிர்வாகம் சார்பில் புது கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.அதாவது, பக்தர்களிடம், ஆதார் ஆதார் எண், மொபைல் போன் எண், முகவரி மற்றும் புகைப்படம் எடுத்து பதிவேட்டில் எழுதிய பின் தான், அறைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இது குறித்து திருத்தணி கோவில் அதிகாரி கூறுகையில், ''சில மாதங்களாக தேவஸ்தான விடுதிகளில், சிலர் அறைகள் எடுத்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக, தொடர்ந்து புகார்கள் வந்தன. இதை தடுக்க, தற்போது அறைகள் எடுக்க மேற்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை