உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ராகிங் இல்லை, டிரிங்கிங் தான்! மருத்துவ கல்லுாரி விளக்கம்

ராகிங் இல்லை, டிரிங்கிங் தான்! மருத்துவ கல்லுாரி விளக்கம்

சென்னை, சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கடலுார் மாவட்டம், நெய்வேலியைச் சேர்ந்த ஜேக்கப் என்பவரின் மகன் ஆலன் கிரைசோ, 21, என்பவர், மூன்றாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., படித்து வருகிறார்.கடந்த, 24ம் தேதி இரவு, கேன்டீனில் சாப்பிட்டு, அறைக்கு சென்று கொண்டிருந்த ஆலனை, ஐந்தாம் ஆண்டு சீனியர் மாணவர்கள் மறித்து பேசியுள்ளனர்.அதில் ஏற்பட்ட தகராறில், சீனியர் மாணவர்கள் பீர் பாட்டிலால், ஆலனின் தலையில் அடித்தனர். இதில், காயமடைந்த ஆலன், சிகிச்சை முடிந்து, நேற்று வீடு திரும்பியுள்ளார்.இந்த சம்பவம் குறித்து இதுவரை போலீசில் புகார் அளிக்கப்படாத நிலையில், மருத்துவ கல்லுாரி நிர்வாகம், முதல்வர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.இதுகுறித்து, மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது:மருத்துவக் கல்லுாரியில் ராகிங் போன்ற மாதிரியான சம்பவங்கள் நடக்கவில்லை. மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் போன்று தான் உள்ளது. இதில், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மூவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.போதையில் இருந்த, சீனியர் மாணவர்கள் ஆலனை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். சம்பவம் நடந்த பின் தாக்கிய மாணவர்கள், கல்லுாரி விடுதியில் இல்லை. அவர்கள் வீட்டிற்கு சென்றிருக்கலாம்.சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில், அம்மாணவர்கள் அடிக்கடி, விடுதியில் மது அருந்தி வருவது தெரிய வந்துள்ளது.இனி, விடுதியில் மது அருந்துதல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீனியர் மாணவர்களிடம் விளக்கம் பெறப்பட்டு, 'சஸ்பெண்ட்' போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி