உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எந்த வேலையும் நடக்கல

எந்த வேலையும் நடக்கல

எந்த வேலையும் நடக்கல தாம்பரம் மாநகராட்சி மூன்றாவது மண்டலத்தில், 14 கவுன்சிலர்கள் உள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதியை மீறி செயல்பட்டதாக, 3வது மண்டல குழு தலைவரும், 40வது வார்டு கவுன்சிலருமான ஜெயபிரதீப்பின் பதவி, கடந்த மார்ச் மாதம் பறிக்கப்பட்டது. அதன்பின், பொறுப்பு அதிகாரி நியமிக்கப்படாததால், அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். இங்குள்ள அதிகாரிகள், கவுன்சிலர்கள் கூறும் பணிகளை செய்வதில்லை. அதேபோல், அந்தந்த வார்டு கவுன்சிலர்களிடம் ஆலோசிக்காமல், இஷ்டத்திற்கு வேலை வைக்கின்றனர். இதனால், மக்களிடம் பதில் கூற முடியவில்லை என, மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை