உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெரினாவில் செயல்படாத குடிநீர் மையங்கள் மாநகராட்சி அலட்சியத்தால் மக்கள் பரிதவிப்பு

மெரினாவில் செயல்படாத குடிநீர் மையங்கள் மாநகராட்சி அலட்சியத்தால் மக்கள் பரிதவிப்பு

சென்னை, சென்னையின் முக்கிய சுற்றுலா தலமான மெரினாவிற்கு, உள்ளூரில் இருந்து மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.தற்போது பள்ளி, கல்லுாரிகள் விடுமுறை என்பதால், வழக்கத்தைவிட மக்கள் வரத்து அதிகமாக உள்ளது.பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், நான்கு இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட்டது. தற்போது, நான்கு மையங்களும் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன.இதனால், வேறு வழியின்றி மணற்பரப்பில் உள்ள கடைகளில் கூடுதல் விலைக்கு, தரமற்ற குடிநீரை வாங்கி , மக்கள் பருகி வருவதால், பலவிதமான உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மணற்பரப்பில் உள்ள கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதனால், சுகாதார துறையினர் யாரும் கடைகளில் ஆய்வு மேற்கொள்வதில்லை' என்றார். மெரினாவில் மாதம் தோறும், மண்டல சுகாதார அதிகாரிகள் ஆய்வு நடத்தி, தரமற்ற உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழிப்பது வழக்கம். இதனால், பொருட்கள் விற்பனைகளில் வியாபாரிகள் கவனம் செலுத்தி வந்தனர்.தற்போது, நீதிமன்றத்தில் வழக்கு என, ஆண்டுக்கணக்கில் அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் விட்டதால், தரமற்ற பொருட்கள் விற்பனைக்கு வழிவகுத்து விட்டது. இதற்கு, மாநகராட்சி கமிஷனர் இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை