உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில் மாயமான லாரி உளுந்துார்பேட்டையில் மீட்பு வடமாநில வாலிபர் கைது

சென்னையில் மாயமான லாரி உளுந்துார்பேட்டையில் மீட்பு வடமாநில வாலிபர் கைது

உளுந்துார்பேட்டை:சென்னை, கொளத்துார் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ்குமார். இவர், அப்பகுதியில் இரும்பு மற்றும் சிமென்ட் விற்பனை கடை வைத்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், ஆயுத பூஜைக்காக லாரியை சுத்தம் செய்துவிட்டு, வீட்டிற்கு சென்றார். நேற்று காலை கடைக்கு சென்று பார்த்த போது, லாரியை காணவில்லை. புழல் போலீசில் தனுஷ்குமார் புகார் அளித்தார்.இந்நிலையில், சுங்கச்சாவடி 'பாஸ்டேக்' வாயிலாக, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை லாரி கடந்து சென்றது தெரியவே, உளுந்துார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை, 11:00 மணியளவில் சுங்கச்சாவடி அருகே லாரியையும், கடத்திய நபரையும் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.விசாரணையில், லாரியை கடத்தியவர் உத்தரப் பிரதேச மாநிலம், பைசாபாத் மாவட்டம், சாய்கஞ்சோரா பகுதியைச் சேர்ந்த ஜூனுத்பிரகாஷ் என்பவரது மகன் சத்தியபிரகாஷ், 20, என தெரிந்தது.இவர் ஓராண்டாக தனுஷ்குமாரிடம் பணிபுரிந்த நிலையில், நேற்று லாரியை கடத்திச் சென்றுள்ளார். சத்தியபிரகாஷை கைது செய்த போலீசார், புழல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை