உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆக்கிரமிப்பால் சுருங்கிய வடக்கு தாங்கல் ஏரி

ஆக்கிரமிப்பால் சுருங்கிய வடக்கு தாங்கல் ஏரி

குன்றத்துார்,குன்றத்துார் ஒன்றியம் மலையம்பாக்கம் ஊராட்சியில், வடக்குதாங்கல் ஏரி உள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரிநீரை பயன்படுத்தி, அப்பகுதியில் 50 ஏக்கருக்கு மேலான நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. தற்போது, அந்த பகுதியில் விவசாயம் கைவிடப்பட்டு, விவசாய நிலம் குடியிருப்புகளாக மாறிவிட்டன. இதனால், வடக்குதாங்கல் ஏரிநீர், பயன்பாடு இல்லாமல் உள்ளது. இந்த ஏரி அருகே வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, பூந்தமல்லி மற்றும் மாங்காடு செல்லும் சாலை உள்ளது. இந்நிலையில், இந்த ஏரியில் மண் கொட்டி நிரம்பி, ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏரி நிலம் சுருங்கி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், ஏரி முழுதும் ஆக்கிரமிப்பில் சிக்கி காணாமல் போகும் ஆபத்து உள்ளது.வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பை அகற்றி, ஏரியை துார்வார வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை