உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திறக்காத கழிப்பறையில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் வெளியேற்றம்

திறக்காத கழிப்பறையில் தங்கியிருந்த வடமாநில தொழிலாளர்கள் வெளியேற்றம்

திருவேற்காடு திருவேற்காடு, வீரராகவபுரம், 13வது வார்டு காடுவெட்டியில், நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அதன் அருகே, 'துாய்மை பாரத இயக்கம் 2.0' திட்டத்தின் கீழ், 36.28 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பொது கழிப்பறை, ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது கழிப்பறை அருகில், காடு வெட்டி துலுக்காணத்தம்மன் கோவிலில், சீரமைப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக, வடமாநில நபர்கள் ஆறு பேர், கழிப்பறையில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாக குற்றச் சாட்டு எழுந்தது. அதை அப்பகுதி கவுன்சிலர் காஞ்சனா மறுத்தார்.இந்நிலையில், கழிப்பறை உள்ளே வடமாநில நபர்கள் பயன்படுத்தும் டேபிள் பேன், பிளாஸ்டிக் பக்கெட், குடிநீர் கேன் உள்ளிட்டவை இருந்தன. இதுகுறித்து, நம் நாளிதழில் கடந்த 30ம் தேதி, படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, இரு தினங்களுக்கு முன், அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த வடமாநில நபர்கள் வெளியேற்றப்பட்டனர். அங்கு கட்டப்பட்டு இருந்த, பிளாஸ்டிக் திரை அகற்றப்பட்டு, கழிப்பறை பூட்டி வைக்கப்பட்டுள்ளது. கழிப்பறையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்என, அப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை