மேலும் செய்திகள்
ரூ.8 லட்சம் வெடி பதுக்கல்: குடோனுக்கு 'சீல்'
03-Oct-2025
ராஜமங்கலம்: விழுப்புரம், எல்ராம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரகாசம், 36; வெல்டிங் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி, மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளனர். இந்நிலையில், தன்னுடன் சித்தாளாக பணியாற்றும் கவுதமி, 28, என்பவருடன், சிவபிரகாசம் கள்ளத்தொடர்பில் இருந்து வந்தார். கொளத்துார், ரெட்டேரி அடுத்த திருவள்ளுவர் நகரில், வாடகைக்கு வீடு எடுத்து கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஒன்றாக மது அருந்தியபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின், சிவபிரகாசம் வீட்டின் பொது கழிப்பறைக்கு சென்றபோது, அதே வீட்டில் வசிக்கும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திப்புசுல்தான், 30 என்பவரும் கழிப்பறைக்கு செல்ல முயன்றார். கவுதமியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரத்தில் இருந்த சிவபிரகாசம், திப்புசுல்தானிடம் வீண் தகராறு செய்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே கைகலப்பாகி உள்ளது. இதில், திப்புசுல்தான், சிவபிரகாசத்தை கையால் தாக்கியுள்ளார். அதீத மதுபோதையில் இருந்த சிவபிரகாசம், மயங்கி விழுந்து இறந்தார். ராஜமங்கலம் போலீசார் திப்புசுல்தானை கைது செய்தனர்.
03-Oct-2025