உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிண்டியில் 25 வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

கிண்டியில் 25 வணிக நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

சென்னை, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, கிண்டி சிட்கோ வளாகம், 404 ஏக்கர் பரப்பு கொண்டது. உற்பத்தி சார்ந்த தொழில்களுக்காக, 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் துவங்க, 1958ல் இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால், பலரும் விதிமீறி விற்பனை செய்தது, வணிகம் சார்ந்து பயன்படுத்தியது போன்றவற்றால், புதிதாக உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் துவங்க வரும் தலைமுறையினருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால், வணிகம் சார்ந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் வலுத்தன. இதையடுத்து, வணிகம் சார்ந்த நிறுவனங்கள் மீது, சீல் வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க, சிட்கோ நிர்வாகம் முடிவு செய்தது. சில நாட்களுக்குமுன், ஒரு டாஸ்மாக் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. நேற்றுமுன்தினம், ஒரு தங்கும் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், விதிமீறி நடத்தப்படும் 25 வணிக நிறுவனங்களுக்கு, சிட்கோ அதிகாரிகள்,நேற்று நோட்டீஸ் வழங்கினர். உற்பத்தி சார்ந்த தொழிலாக துவங்குவோம் என உறுதி அளித்ததால், சிட்கோ நிர்வாகம் அனுமதி வழங்குகிறது. இதை கண்காணிக்க குழுவும் அமைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ