உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குப்பை கூளமான வேளச்சேரி ஏரி மத்திய - மாநில அரசுக்கு நோட்டீஸ்

குப்பை கூளமான வேளச்சேரி ஏரி மத்திய - மாநில அரசுக்கு நோட்டீஸ்

சென்னை, கழிவுநீர், குப்பை கொட்டும் இடமாக வேளச்சேரி ஏரி மாறியது குறித்து, மத்திய - மாநில அரசுகள் பதில் அளிக்கும்படி, டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது.வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள வேளச்சேரி ஏரி, கழிவுநீர், குப்பை கொட்டும் இடமாகவும் மாறிவிட்டது. இதனால் மாசடைந்து துர்நாற்றம்வீசுவதோடு, கொசு உற்பத்தி மையமாகவும் மாறியுள்ளது.அருகில் வீடுகளில் வசிப்போர், துர்நாற்றத்துடன் வாழ வேண்டி உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது வந்து, ஏரிக்கரையோரம் உள்ள கழிவுகளை மட்டும் அகற்றி செல்கின்றனர்.இது தொடர்பாக, மே 28ல் நாளிதழ்களில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்து வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி அருண்குமார் தியாகி, நிபுணர் குழு உறுப்பினர் செந்தில்வேல் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு பிறப்பித்த உத்தரவு:வேளச்சேரி ஏரி கழிவுநீர் குளமாக மாறியதால், அதைச் சுற்றியுள்ள வீடுகளில் வசிப்போர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஏரியின் மோசமான நிலைக்கு, சென்னை குடிநீர் வாரியமே காரணம் என, குடியிருப்பாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.ஏரிக்குள் நேரடியாக கழிவுநீர் விடப்படுவதே மோசமான நிலைக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. இது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம், நகராட்சி திடக்கழிவு மேலாண்மை விதிகள், நீர் மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தின் விதிகளை உள்ளடக்கியது.எனவே, இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், வனத்துறையின் சென்னை மண்டல அலுவலகம், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை குடிநீர் வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியவை பதிலளிக்க வேண்டும்.இந்த வழக்கின் அடுத்த விசாரணை, சென்னையில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் வரும் ஆக., 7ல் நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !